Sunday, 21 August 2011

கடலில் அட்டை பிடித்ததாக ஆட்டோ டிரைவர் கைது .போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் :


     கடல் தொழில் செய்பவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என்று மொத்தம் 18 பேர் மீது கடல் அட்டை பிடித்ததாக போலீசார்  பொய்வழக்கு போட்டுள்ளனர் இத்தகைய போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக போலிசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடந்ததது .

அதில் கம்யுனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதி ,மாநில செயலாளர் திரு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் .அப்போது பேசிய திரு மூர்த்தி அவர்கள்    கடல் தொழிலை நம்பியுள்ளவர்கள் அநேகம் பேர் கடல் அட்டையை மையமாக வைத்து தங்களது வாழ்கையை நடத்தி வருகிறார்கள் .அப்படி இருக்க இந்த அரசாங்கம் அரியவகை உயிரினம் என்று கூறி அட்டையை தடை செய்துள்ளது .கடல் அட்டையை பொறுத்தவரை ஆறுமாத காலம் மற்றும் உயிர்வாலகூடியது .அதற்க்கு பிறகு தானாகவே அழிய கூடியது .அழிய கூடிய உயிரினத்தை மக்கள் தங்கள் வாழ்க்கைகாக பயன்படுத்துவது என்ன தவறு என கேள்வி எழுப்பினார் .மேலும் இந்த அரசாங்கம் உடனே அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.                   
                                                                                                                  நமது நிருபர் 
                                                                                                                         PPM












2 comments:

  1. assalamu alaikum nalla muyarchi intha valai thalam anayvaraiyum setru ataya ventum

    ReplyDelete