Thursday 18 June 2015

தலைப்பிறை


இது எங்கள் ஊரின் பாராம்பரியம்,ரமலான் பிரையை கண்டவுடன் எங்கள் ஊரில் இருக்க கூடிய 2500 கு மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளில் சகோதரத்துவத்தை பேனுவதற்காக இவ்வாறு வருடம் வருடம் செய்வதுண்டு.

ரமலான் மாதத்திற்கு முன்பாக யாரிடமாவது சண்டைகள் செய்திருந்தாலும் இந்த நாளில் அவர்களின் வீட்டிற்கு சென்று ஸலாம் கூறி மனகசப்பை தூக்கி எறிந்து நீங்களும் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறி வருவார்கள்.

அவர்களும் மகிழ்ச்சியிடன் அவர்கள் வீட்டிற்கும் சென்று சகோதரத்துவத்தை வலுபடுத்துவார்கள்.

மஹரிஃபிலிருந்து இஷா வரை எங்கள் ஊர் வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் போன்று காட்சி அளிக்கும்.

இதில் சிறுவர்கள் எந்த நாளிலும் கொண்டாடிடாத மகிழ்ச்சியை இந்த நாளில் தான் அவர்கள் நண்பர்களிடன் கூடி வீடு வீடாக ஸலாம் கூறி மிட்டாய்,வாங்கி சாப்பிடுவார்கள்.


 இந்த நாள் வரும்போது யெல்லாம் என்னை 17 வருடங்களுக்கு பின்னால் இழுத்து செல்கிறது.

- சாகுல் ஷா

Tuesday 16 June 2015

பெரியபட்டினம் அருகே அரசு பள்ளியில் ஹிஜாப் அணிய தடை கண்டுகொள்ளாத முஸ்லிம் இயக்கங்கள் களமிறங்கிய கேம்பஸ் ஃப்ரண்ட்



பெரியபட்டினம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

பெரியபட்டினம் அருகே உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வண்ணாங்குண்டு ஊரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு அமைப்பிற்கு சமீபத்தில் புகார் ஒன்று வந்திருக்கிறது. 


அந்த புகாரில் எங்கள் ஊர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்களின் பெண் பிள்ளைகளை ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

அவர்களின் புகாரை கவனத்தில் கொண்டு 15.6.2015 இன்று காலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அல் ஆசிர் மூலம் தலைமை ஆசிரியருக்கு இந்த புகாரை கவனத்தில் கொண்டு சென்றனர். 

அந்த புகாரில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முன்னர் அறிவித்திருக்கும் ஆணையை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து வகை கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சீருடையுடன் தனி மத அடையாளங்களை அணிந்து செல்வதற்கு தமிழக கல்வித்துறை தடை ஏதும் பிறப்பிக்கவில்லையாதலால் அப்படி அணிந்து செல்லலாம்.


தலைமை ஆசிரியருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் 

இஸ்லாமிய மாணவர் தலையில் தொப்பியும்,முகத்தில் தாடியும் மற்றும் இஸ்லாமிய மாணவியர் தங்கள் தலையில் ஹிஜாப் என்றும் மேலாடை அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு தமிழ் நாடு அரசு கல்வித்துறை தடை ஏதும் விதிக்கவில்லை. 

கிருஸ்தவ மாணாக்கர்கள் சிலுவை அணிவதற்கும்,பிற மதத்தவர் மாணாக்கர்கள் ,திருநீறு மற்றும் பொட்டு அணிவதற்கும் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும் தமிழ்நாடு கல்வித்துறையின் தடை ஏதும் இல்லை. என்றும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த தலைமை ஆசிரியர் S.ஜோ விக்டோரினா டயஸ் "நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் எங்கள் கல்வி அலுவலகத்துக்கு இதுவரை கல்வித்துறை இருந்தும் என்னுடையை மேல் உள்ள அதிகாரி மூலமோ இது சார்ந்து எந்த ஒரு சுற்றறிக்கையும் வந்தது இல்லை சுற்றறிக்கை வந்தால் மட்டுமே அனுமதி கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.

மேலும் எங்களுக்கு சுற்றறிக்கை வரும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் என்னும் மேலாடை அணிய எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை இருக்கிறது என்று அரசாங்கம் சுற்றறிக்கை அனுப்பவே இல்லை எனும்பொழுது  அவர்கள் அணிந்து வரலாம் என்பது தெளிவாகிறது. ஆனால் தலைமை ஆசிரியன் என்ன சுற்றறிக்கையை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. 















இதற்க்கு அடுத்தகட்ட நடவடிக்கை கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக எடுக்கப்படும் என்பதாக கேம்பஸ் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அழ ஆசிர் தெரிவித்துள்ளார். 

ஆனால் ஏனோ மற்ற இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத் தலைவர்களும் அமைதியாக இருக்கின்றனர். 

Tuesday 23 August 2011

ஆடம்பரத்தில் பரக்கத் இருப்பதில்லை :


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
 இனிய ரமலானும் அது தரும் சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளும் கடந்த காலங்களுடன்முடிந்துவிட்டன பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியும், தேங்காய் துவையலும்கொடுத்த சுவைகள் நம் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டது, எல்லோரும்கூடி அமர்ந்து பகிற்ந்துண்ட நிலாக்காலங்களை நம் சமூகம் மறந்துவிட்டது.

Sunday 21 August 2011

பெரியபட்டினத்தில் சூடு பிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்:-


         நடை பெற விருக்கும் ஊராட்சி தேர்தலை ஒட்டி பெரியபட்டிணத்தில் வேட்பாளராக நிற்க விருக்கும் தலைவர்கள் போது மக்களின் குறை கேட்டு 2 மணி நேரத்தில் சரி செய்வதோடு .பெரியபட்டிணத்தில் கடந்த 5 வருட காலமாக குண்டும்  குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்க பட்டு வருகின்றன.

கடலில் அட்டை பிடித்ததாக ஆட்டோ டிரைவர் கைது .போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் :


     கடல் தொழில் செய்பவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என்று மொத்தம் 18 பேர் மீது கடல் அட்டை பிடித்ததாக போலீசார்  பொய்வழக்கு போட்டுள்ளனர் இத்தகைய போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக போலிசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடந்ததது .

Saturday 20 August 2011

பெரியபட்டிணத்தில் போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கு:



    கடல் பகுதியில்  வசிக்க கூடிய அநேகம் பேர் இந்திய அரசாங்கத்தால் தடை செய்ய பட்டுள்ள அறிய வகை உயிரனமாக கருதபடகூடிய  அட்டையை  நம்பியுள்ளார்கள்.இந்த அட்டையை நம்பி வாழும் மக்கள் இன்று தங்கள்  அன்றாடம் வாழ்க்கையை நடத்துவது என்பது அரிதான ஒன்றாக உள்ளது என்கின்றார்கள்.

பெரியபட்டிணத்தில் குர்ஆன் மற்றும் கிராத் ஓதும் போட்டி நடைபெற உள்ளது :



     பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் 21.08.2011 இன்று   காலை 10  மணியளவில் இஸ்லாமிய இளைஞர்கல் சபை  சார்பாக மாணவர்களுக்கு குர்ஆன் மற்றும் கிராத் ஓதும் போட்டி நடைபெற உள்ளது அதில் சிறப்பாக ஓதும் மானவர்களுக்கு முதல் பரிசாக ருபாய் 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1000 ரூபாயும் கொடுக்க உள்ளார்கள்.


Sunday 31 July 2011

நோன்பாளிகளே உங்களைத்தான்!

                                            

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

Ø  1, 2, 3 மணிக்கு ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன்சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.

Thursday 28 July 2011

PFI-ன் சார்பாக பெரியபட்டிணத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவு திறன் போட்டி :


        25/07/2011 அன்று  பெரியபட்டினம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக மாணவர்களுக்கான அறிவு திறன் போட்டி நடத்தப்பட்டது .அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்.

Sunday 24 July 2011

இந்திய அரசாங்கம் இராணுவத்திற்கு பயிற்றுவிப்பது என்ன ?கேள்வி குறியாகும் கஷ்மீர் பெண்களின் நிலை ?:


      இந்தியாவை காப்பதற்காக உருவாக்கப்படும் இந்திய இராணுவத்திற்கு அரசாங்கம் பயிற்றுவிப்பது என்ன வென்பது கஷ்மீரில் நடக்கும் அவலத்தை வைத்து பார்க்கும் போது நம் மனத்திர்ற்குள் பெரும் ஐயம் ஏற்படுகிறது .இந்தியாவை காப்பதற்காக இந்திய எல்லையான கஷ்மீரில்