மீண்டும்
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Tuesday, 23 August 2011

ஆடம்பரத்தில் பரக்கத் இருப்பதில்லை :


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
 இனிய ரமலானும் அது தரும் சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளும் கடந்த காலங்களுடன்முடிந்துவிட்டன பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியும், தேங்காய் துவையலும்கொடுத்த சுவைகள் நம் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டது, எல்லோரும்கூடி அமர்ந்து பகிற்ந்துண்ட நிலாக்காலங்களை நம் சமூகம் மறந்துவிட்டது.

Sunday, 31 July 2011

நோன்பாளிகளே உங்களைத்தான்!

                                            

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

Ø  1, 2, 3 மணிக்கு ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன்சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.

Saturday, 23 July 2011

தற்பெருமை கொள்ளாதீர்கள் :


     எல்லாம் வல்ல இறைவன் வானத்தையும், பூமியையும் ,மனிதனையும் படைத்த இறைவன் சில விசயங்களை  மனிதன் கண்டிப்பாக தடை செய்யணும். அது அறவே தவிர்க்க வேண்டும் என்று தடுக்கிறான் .அதில் மிக முக்கியமான  ஒன்று பெருமை .ஒரு மனிதன் எந்த காரியத்தை செய்தாலும்


Thursday, 30 June 2011

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை ! :


          மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

Monday, 30 May 2011

நபி(ஸல்):


ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். (அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்) கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும், ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.



“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ் நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.

(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) “கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண் தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு

“நிச்சயமாக அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும் என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர் திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான் (வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு 

Sunday, 10 April 2011

அண்ணலாரின் அற்புத வழிமுறை

‘‘ரபீஆ, கல்யாணம் பண்ணவில்லையா?’’ - இறையில்லத்தில் தன்னோடு எப்பொழுதும் ஒன்றாக இருக்கும் இளைஞர் ரபீஆவைப் (ரழி...) பார்த்து ஒரு நாள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்...)அவர்கள் கேட்டார்கள்.

ரபீஆ ஓர் ஏழை. சொந்த வீடு இல்லை. அவருக்கென்று ஒரு குடும்பமில்லை. இறுதித்தூதருக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இறையில்லத்திலேயே அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. திருமணம் முடித்தால் மனைவியுடன் வசிப்பதற்கு வீடு வேண்டும். மனைவிக்கு செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதெல்லாம் தனக்குச் சாத்தியமில்லை என்றே ரபீஆ (ரழி...) எண்ணியிருந்தார்.

‘‘எனக்குக் கல்யாணம் வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே, குடும்பத்தை நடத்துவதற்கு எனக்கு சக்தியில்லை.’’ - பெருமானாரின் கேள்விக்கு ரபீஆவின் பதில் இவ்வாறாக இருந்தது.

சில நாட்கள் கழிந்தன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்...) அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்கள். ரபீஆவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறை அண்ணலார் இதுகுறித்து வினவியபொழுதுதான் ரபீஆவுக்கு ஏதோ பொறி தட்டியது. அண்ணலார் காரியமில்லாமல், உரிய காரணமில்லாமல் மீண்டும் மீண்டும் இதனைக் கேட்க மாட்டார்களே என்றெண்ணிய ரபீஆ (ரழி...) அண்ணலாரிடம் இவ்வாறு கேட்டார்:
‘‘அல்லாஹ்வின் தூதரே, வீடும் குடும்பமுமில்லாத எனக்கு யார் பெண் தருவார்கள்?’’

அண்ணலார் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்கள். ஒரு குடும்பம் உண்டு. அங்கே ஒரு பெண் இருந்தார். அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி ரபீஆவை அண்ணலார் அனுப்பி வைத்தார்கள்.

நல்லதொரு குடும்பம் அது. தேவைக்குப் பண வசதியும் இருந்தது. தங்கள் பெண் பிள்ளைக்கு அல்லாஹ்வின் தூதரே ஒரு வரனை அனுப்பியதை அவர்கள் அல்லாஹ்வின் அருளாகவே கருதினார்கள். ரபீஆவின் வறுமை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.

‘‘அல்லாஹ்வின் தூதருக்கு நல்லது நடக்கட்டும். அவர்கள் அனுப்பி வைத்த உங்களுக்கும் நல்லது நடக்கட்டும். திருமணத்திற்கு நாங்கள் தயார்’’ என்றார்கள் அக்குடும்பத்தார்.

அந்த வீட்டிலிருந்து திரும்பும்பொழுது ரபீஆவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உண்மையில் திருமணம் நடந்து விடும் போல் தெரிகிறது. மஹர் பணம் கொடுக்கவோ, வலிமா எனும் திருமண விருந்து அளிக்கவோ தன்னிடம் சல்லிக் காசு கூட கிடையாது.

அல்லாஹ் ஏதாவதொரு வழியைக் காண்பிப்பான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு அண்ணலாரிடம் திருமணத்திற்குப் பெண் வீட்டார் சம்மதித்ததைக் கூறினார் ரபீஆ. அடுத்தடுத்த காரியங்கள் அண்ணலாரின் அறிவுரைப்படி அருமையாக அரங்கேறின.

ரபீஆவின் சில தூரத்துச் சொந்தங்களை அண்ணலார் அழைத்தார்கள். ரபீஆவின் திருமணத்திற்கு உதவியாக இருக்கும்படி அவர்களிடம் கூறினார்கள். எளிமையான திருமணத்திற்கு என்ன ஏற்பாடுகள் வேண்டிக் கிடக்கிறது? அண்ணலாரே அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்க முடியும். இருந்தும் இப்படிச் செய்தார்கள் என்றால் தனக்கும் சொந்தங்கள் உண்டு என்ற எண்ணம் ரபீஆவுக்கு வந்து அவருக்கு தைரியமூட்டும் என்பதாலேயே.

ரபீஆவுக்கு வீடு அமைத்துக்கொள்ள சிறு நிலமும் அளித்தார்கள் அண்ணலார். திருமணம் முடிந்தது. ரபீஆவின் குடும்பம் அங்கே தழைத்தோங்கி வளர்ந்தது.

இறையில்லத் திண்ணையில் அனாதையாயிருந்த ஒரு தோழரை சாதாரண, சராசரி வாழ்க்கைக்கு கருணை நபியவர்கள் கைப்பிடித்துக் கொண்டு வந்த கலையைக் கவனித்தீர்களா?

சமூகத்தில் ரபீஆவைப் போல் பல பேர் உண்டு. மிகப் பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே அவர்களைச் சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியும். முன் கையெடுக்க ஒரு ஆள் இருந்தால் போதும் - சமுதாயத்தில் அனாதைகளுக்கு ஆதரவு கிடைக்கும். அல்லல் படுபவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். மொத்தத்தில் சமுதாயம் துள்ளியெழும்!