Saturday, 20 August 2011

பெரியபட்டிணத்தில் போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கு:



    கடல் பகுதியில்  வசிக்க கூடிய அநேகம் பேர் இந்திய அரசாங்கத்தால் தடை செய்ய பட்டுள்ள அறிய வகை உயிரனமாக கருதபடகூடிய  அட்டையை  நம்பியுள்ளார்கள்.இந்த அட்டையை நம்பி வாழும் மக்கள் இன்று தங்கள்  அன்றாடம் வாழ்க்கையை நடத்துவது என்பது அரிதான ஒன்றாக உள்ளது என்கின்றார்கள்.

கடல்  அட்டையை காக்க அரசாங்கம் பெரிய அளவு முயற்சி எடுத்து வருகிறது ஆனால் எங்களை காப்பாற்ற ஏன் இந்த அரசாங்கம் முன் வருவதில்லை என்பது அவர்களின் அழுகுரலாக உள்ளது .   பெரியபட்டிணத்தில் வசிக்க கூடிய மக்கள் கடலுக்கு சென்றால் அட்டை எடுக்க செல்கிறார்கள் என்று சொல்லி போலீஸ்  அவர்களை அடிப்பது ,அவர்கள் மீது பொய்வழக்கு போடுவது என்பது சாதாரணமாக நடந்து வருகிறது  . இதே போன்று 20.08.2011 அன்று பெரியபட்டினத்தை சேர்ந்த 18 நபர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள் .இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள்  ராமநாதபுறம்  சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதற்க்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை 
குறிப்பு :
அண்டை நாடான இலங்கை  மக்களின் நலன் கருதி அட்டை மீதான தடையை நீக்கியுள்ளது என்பது குறிப்பிட தகுந்தது    
                                                                                                                   
                                                                                                                      
                                                                                                                    நமது நிருபர் 
                                                                                                                           INVA

No comments:

Post a Comment