அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
இனிய ரமலானும் அது தரும் சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளும் கடந்த காலங்களுடன்முடிந்துவிட்டன பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியும், தேங்காய் துவையலும்கொடுத்த சுவைகள் நம் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டது, எல்லோரும்கூடி அமர்ந்து பகிற்ந்துண்ட நிலாக்காலங்களை நம் சமூகம் மறந்துவிட்டது.
இப்பொழுதெல்லாம் புதிய கலாச்சாரம் ஒன்று நமது ஊர் இலைஞர்களிடையே பரவி வருகிறது, நன்மையை நாடி அவர்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகள் இன்று ஆடம்பர விருந்துகளாய்ப் பரிணமித்து சில மனக்கசப்புகளுடன் முடிவடைகிறது, ரமலானில் ஏதொ ஒருநாள் ஏழைளுக்கு நல்ல உணளிப்பது என்பது வரவேற்க்கப்பட வேண்டியதுதான் ஆனால் இந்த இஃப்தார் நிகழ்ச்சிகளில் ஏழைகள் புறக்கனிக்கப்பட்டு ஆடம்பரம் மிகைப்பது தான் வேதனையானது.
விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம்.
வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்
இன்றுப் பார்க்கின்றோம்.
எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகைஉணவுகளை தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ணமுடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாடவழக்கமாகி விட்டது.யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு வேண்டுமென்றேவெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.
இதில்இரண்டாவது நிலையே நமது ஊரில் நடக்கிறது
அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்றுகருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில்இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய்ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.
அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம்அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,
இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லதுசிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும்சேர்க்கப்படலாம்.
பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால்வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும்,இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.
இஸ்லாம் தடை செய்கிறது.
இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறதுஎந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறிகீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம் ...உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும்பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள்அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: முஸ்லிம்,அஹமத், அபூதாவூத், திர்மிதி.
ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம்கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்
அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்தமனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள்வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்துஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சைமரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவமரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனைஉண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்)கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம்செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.
நன்றி
சகீது PPM
அஸ்ஸலாமு அலைக்கும்....,
ReplyDeletehttp://periyapattinamvoice.blogspot.com வலைத்தளம் நடத்தும் சஹோதரர்களுக்கு - சற்றும் தொய்வில்லாமல் இந்த வலைதளத்தை நடத்தினால் உங்கள் ஊரில் நடக்கும் நல்லவை மற்றும் நீதிக்கு எதிராக நடக்கும் ........., பற்றி அவ்வப்போது அறிந்துக்கொள்வதர்க்கு ஏதுவாக இருக்கும் என்பது எனது கருத்தாக உள்ளது.-
--------------------
JAMAL
GLOBAL ADVOCATES
DUBAI - U A E