இந்தியாவை காப்பதற்காக உருவாக்கப்படும் இந்திய இராணுவத்திற்கு அரசாங்கம் பயிற்றுவிப்பது என்ன வென்பது கஷ்மீரில் நடக்கும் அவலத்தை வைத்து பார்க்கும் போது நம் மனத்திர்ற்குள் பெரும் ஐயம் ஏற்படுகிறது .இந்தியாவை காப்பதற்காக இந்திய எல்லையான கஷ்மீரில்
பயிற்சி அளித்து இராணுவத்தை குவித்து வைப்பது இந்திய மக்களை காப்பதர்காகவா ,அல்ல கஷ்மீர் பெண்களின் கற்பை சூரையாடுவதர்க்காகவா .
ஒவ்வொரு நாலும் இந்திய இராணுவத்தால் கஷ்மீர் பெண்கள் படும் அவலம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவர்கள் வெளியே சென்று திரும்புவது என்பது கேள்விக்குறியான ஒன்றாகத்தான் உள்ளது மற்றும் இன்றி அவர்களின் வீடுகளிலும் இதே நிலைமைகள் தான் ,இராணுவத்தினருக்கு கொடுக்க பட்ட ஆயுதம் கஷ்மீர் பெண்களை பணியவைப்பதற்கு உப்போயோகபடுத்துவது கேவலமான ஒன்று .
இப்படிப்பட்ட அநிதீயை எதிர்த்து போராடும் இளைஞர்கள் இந்திய இராணுவத்தினரால் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு கொளைசெய்யபடுவது சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது .ஆனால் இப்படிப்பட்ட செயலை செய்யும் இராணுவத்திற்கு எந்த தண்டனையும் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை .
சட்டம் என்பது பாகுபாடு இன்றி இயற்றப்பட வேண்டும் ,அது பிரதமாராக இருந்தாலும் சரி இராணுவத்தினர் என்றாலும் சரி சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் அதுவே நியதி.
நன்றி
புரோஸ் PPM
No comments:
Post a Comment