Saturday, 23 July 2011

காவி தீவிரவாதிகளின் மோக சூழ்ச்சி ,பெண்களே உஸார்:



       கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4),இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் 



என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.


மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர். புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி
வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள்
தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார்.இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு பஜ்ரங்தள் குண்டர்களையும்
அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் ரீதியிலும்  துன்புறுத்தியதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.

புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர்,இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.மேலும்,இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்றுவிடப்போவதாக பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
                                                                                                                 
                                                                                                                  நன்றி 
                                                                                                               பைசல் ppm
                                                                                       
                                                                                                                 

3 comments:

  1. When Babri masjid issue was begins in our country... Most of the indian muslims came to know about planning of the RSS. Then how Bushra fell in the love with a non muslim?? I am appriciate her,for she would continue as Muslim.muslim parents should moniter them childrens,Eman is bigger than other....!

    ReplyDelete
  2. allah therpu allipan..........aameen

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    பெண்களே உஷார்...!

    மதம் என்பது புனிதமானது ஓன்று! ஆனால் மனிதர்களாகிய நாம்தான் சரியாக புரிந்துகொள்ளாமல் மதம் (கர்வம், கோபம், சினம்) கொண்டு இவ்வுலகில் அலைந்து கொண்டு இருக்கிறோம்.

    உலகில் மனிதனாக ஒருவரை மட்டும் மண்ணால் படைக்கப்பட்டு பல கிளைகளாக அல்லாஹ்வின் உதவியால் பிரிந்து கிடக்கிறோம் என்பது உண்மை. அவரவர்களின் மதம், கொள்கை அவர்களுக்கு உண்மையாகவும், நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இருக்கும். நாம் யாரும் யாரையும் தடுக்கமுடியாது, வற்புறுத்தல் கூடாது என்பது இறைமறையின் கொள்கை. ஆனால் சில அறிந்த பாசீசவாதிகள் வேண்டுமென்றே அடுத்தவரை இழிவுப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் மதமாற்றம் செய்கிறார்கள். இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இஸ்லாம் யாரையும் நிர்பந்திக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. ஆனால் சில எதிரிகள் நமக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று நம்மீது அளவுக்கு அதிகமாக சேற்றை வாரியிரைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எறியும் சேர் அவர்கள்மீதுப்பட்டு அவர்கள்தான் அசுத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லாவற்றிகும் அல்லாஹ் போதுமானவன்.

    பாசீசவாதியின் நோக்கமே முஸ்லிம்களை அழிக்கவேண்டும் அதாவது முஸ்லிம் பெண்களை காதல் என்கிற அடிபப்டையில் தன் பக்கம் மயக்கி அவர்களுக்கு தங்கள் இனத்தின் வாரிசுகளை உருவாக்கி பிறகு நடுத்தெருவிலே நிறுத்தவேண்டும் என்பதே அவர்களின் தலையாய குறிக்கோள். இன்ஷா அல்லாஹ் இவர்கள் மீது கடும் தண்டனையளிப்பான் / நாம் அனைவரையும் பாதுகாப்பான். ஆமீன்.

    ஆகவே முஸ்லிம் பெண்களாகிய நீங்கள் கண்டிப்பாக உணர்ந்துகொள்ளுங்கள். காவிவாத பொய்யானவர்களின் பேச்சில் மயங்கி தங்களின் வாழ்வை நாசப்படுத்தி விடாதீர்கள். அவர்கள் எப்போதுமே நமக்கு எதிராகத்தான் செயல்படுபவர்கள். அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக அந்நியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளாதீர்கள். அதுபோன்ற சமயத்தில்தான் சைத்தானின் தூண்டுதல் நம்மை வலிகேடுக்கவே அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு வாழுங்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து எவ்வித பிரயோஜனமில்லை என்பது போல தயவுசெய்து நீங்கள் ஒருதடவை வழித் தவறிவிட்டால் உங்களின் வாழ்வு முற்றிலும் சீரழிந்துவிடும்.

    கண்ணியமிக்க சகோதரர்களே ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்போல காதல் என்கிற அடிப்படையில் மாற்றுமத சகோதரனை மணந்து வாரிசுகளைப் பெற்றுக்கொண்டு மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தியிருக்கிரார்கள். இவர்களுக்கு உடந்தையாக கணவன் என்கிற கள்ளன் துணையாகப் போயிருக்கிறான் என்பதை நினைக்கும்போது கொடுமையாகவும், வேதனையாகும் இருக்கிறது.ஆல்லாஹ் உதவியால் அந்த பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாம் என்கிற புனித மார்க்கமான இஸ்லாத்தை உறுதி செய்திருக்கிறான் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது, சந்தோசமாக இருக்கிறது.!


    தயவுசெய்து சகோதரர்களே! கண்ணியமான முறையில் பெண்களில் வாழ்வை சரியான முறையில் அமைத்துக்கொடுங்கள். பாதுகாப்பான முறையில் வளருங்கள். அந்நியர்களை நம்பி வெளியில் அனுப்பாதீர்கள்.

    யா அல்லாஹ்! பாதிக்கப்பட்ட பெண்மணிக்கும், எங்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளத்தில் ஈமானையும், தீனையும், இஸ்லாம் என்கிற புனித மார்க்கத்தையும் உறுதிப் படுத்துவாயாக ஆமீன்..யாரப்பல் ஆலமீன்...!

    ReplyDelete