Saturday, 23 July 2011

தற்பெருமை கொள்ளாதீர்கள் :


     எல்லாம் வல்ல இறைவன் வானத்தையும், பூமியையும் ,மனிதனையும் படைத்த இறைவன் சில விசயங்களை  மனிதன் கண்டிப்பாக தடை செய்யணும். அது அறவே தவிர்க்க வேண்டும் என்று தடுக்கிறான் .அதில் மிக முக்கியமான  ஒன்று பெருமை .ஒரு மனிதன் எந்த காரியத்தை செய்தாலும்


பிறருக்காகவும் என்னால்தான் செய்யப்பட்டது என்று தன்னைதானே புகழ்ந்து கூறுவதுதான் பெருமை 

                                        "பெருமையடிப்பது சைத்தானின் குணம் "

ஆதமுக்கு பணியுங்கள் என்று நாம் வானவர்களுக்கு கூறியபோது இப்லிசை தவிர அனைவரும்  பணிந்தனர் .அவனோ மறுத்து பெருமையடித்தான் (நம்மை) மறுப்பவனாக ஆகிவிட்டான் (2:34)

பெருமை  என்பது சைத்தானின் குணம் .சைத்தான் பெருமையால் அல்லாஹ்வை மறுத்து காஃபிராக மாறிவிட்டான் .அல்லாஹ் சொன்ன கட்டளைகளை மறுத்து நான் தான் உயர்ந்த்தவன் என்று சொல்லி கொண்டதால்  விரட்டபட்டவனாக மாறிவிட்டான் 

                    "பெருமை என்பது அல்லாஹுவுக்கு மட்டும் சொந்தமானது" 
வானங்களிலும் , பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது .அவன் மிகைத்தவன் ;ஞானமிக்கவன்                                                           (45:37)
உமது இறைவனை பெருமை படுத்துவிராக                                  (74:3)

வானங்களிலும்  பூமியிலும் உள்ள என்னற்ற     அதிசயங்களை படைத்து அதில் ஆட்சி செய்கின்ற அல்லாஹ்வை  அதிக அதிக மாக  போற்றி புகல வேண்டும் 

         "  பெருமையடித்தல் பாவத்திலும் தள்ளும், நேர்வழியும்  பெறமாட்டான் "
"அல்லாஹ்வை அஞ்சிகொல்லுங்கள் !" என்று அவனிடம் கூறபட்டால்
அவனது ஆணவம்,  அவனை பாவத்தில் ஆழ்த்துகிறது .அவனுக்கு நரகேமே போதுமானது .அது மிகக் கெட்ட  தங்குமிடம்                                          (2:206)

நியாயமின்றி  பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன் .அவர்கள் எந்த சான்றை கண்டாலும் அவற்றை நம்ம மாட்டார்கள் .நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது)  வழியாக கொள்ளமாட்டார்கள் வலிகேடான பாதையை  அவர்கள் கண்டால் அதை (தமது) வலியாக்கிகொல்வார்கள்.   அவர்கள் நமது வசனங்களை பொய் என கருதியதும் அவற்றை அலட்சியபடுத்தியதும் இதற்க்கு காரணம் (7:146)

நன்மையான விஷயத்தை பற்றி சொன்னால் அலட்சியம் செய்கிறோம் .நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கமாட்டோம் .எங்கள் வலிதோண்டர்கள்    எதை செய்தார்களோ அதை தான் செய்வோம்  என்று ஆணவத்தோடு  நடக்கிறார்கள் .குர்ஆண் ,ஹதிஸை மறுக்ககூடிய செயலை பார்க்கிறோம் .எங்கள் வலிதோண்டர்கள் வாழையடி  வாழையாக  வாழ்ந்த மார்கத்தை விடமாட்டோம்  என்று ஆணவத்தோடு சொல்கிறார்கள் 

                                           ஆணவம் கொண்ட மனிதனுக்கு நரகம்தான் !

நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள் "என்று கூறப்படும் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் .பெருமையடித்தோர் தங்கும் இடம் மிகவும் கெட்டது (39:72)

ஏக இறைவனை மறுத்தோர் நரகத்தின் முன்னே  கொண்டு செல்லப்படும் நாளில் "உங்கள் உலக வாழ்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே  அளித்து விட்டீர்கள் .அதிலேயே இன்பம் கண்டீர்கள்  .நியாயமின்றி பூமியில் பெருமை அடித்து கொண்டிருந்ததாலும்  நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்றைய தினம் இல்வு தரும் வேதனையை பரிசாக வளங்கபடுவீர்கள் "(என்று கூறப்படும் ) (46:20)

         ஆண்களும் பெண்களும் வெவ்வேறு  விதத்தில்; பெருமை அடித்து கொள்கின்றனர் 

ஆண்களை எடுத்து கொண்டால் செல்வத்தை வைத்து பெருமை அடித்து கொள்கின்றனர் 
பெண் என்பவள் தான்தான் அழகாக இருக்க வேண்டும் என்று பெருமை அடிக்கிறாள் 

கண்ணியம் எனது மேலாடை ,பெருமை எனது கீழாடை .இதில் யார் என்னிடம் சண்டையிடுவாரோ அவரை நான் வேதனை செய்வேன் என்று  அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 
                                                                                                                
                                                               அறிவிப்பாளர்அபூஈத்(ரலி),அபூஹுரைரா(ரலி )
                                                                                                    முஸ்லிம் (4752)

      பெருமையால் இறைவனிடம்  மறைமுகமாக சண்டை போடதிர்கள் ,பெருமை நன்மையை அளித்து விடும் ,நரகத்தில் கொண்டு சேர்க்கும் இறைவனை அஞ்சி அவனிடம் பாவமன்னிப்பு தேடுங்கள் .அவன் மன்னிப்பவன் 

நரகத்தில் தள்ளும் இந்த பெருமையை நம் உள்ளத்தில் கடுகளவு வராமல் இருக்க முயற்சி செய்வோம் ,நரகத்தில் இருந்து காத்து  கொள்வோம் .இம்மையில் வெற்றி பெறுவோம் .இறைவன் அனைவரும் மீதும் அருள் புரிவானாக

                                                                                                               நன்றி 

                                                                                              பெனாசிர் நிஷா ஆலிமா
                                                                                        (கிளியனூர் ,நாகை மாவட்டம்) 



1 comment:

  1. ,,,,,,,,,,,,நோய் பரப்பும் சாலை ,,,,,,,,,,, அஸ்ஸலாமு அழைக்கும்,,,,,, இந்த மடல் பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடன் உங்களை சந்திக்கட்டும் ....அன்புள்ள பெரியபட்டினம் பஞ்சாயத்து மற்றும் அதன் உருபினர்களுக்கு ....நான் கடந்த 22 \4 \2012 அன்று ''இந்திய தௌஹீத் ஜமாஅத்'' நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பிரச்சாரத்திற்கு வந்து இருந்தேன் அந்த கூட்டம் நடந்த இடத்திற்கு அருகாமையில் பெண்கலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் (போஸ்ட் ஆபீஸ் ரோடு )இந்த இடத்தில் துர்நாற்றம் வீசி மக்கள் நடபதுகூட மூக்கை மூடிகொண்டு போகும் அவல நிலையை பார்த்தேன் இந்த இடத்தில் எங்களால் உட்கார்ந்து .இந்த நாற்றத்தை எங்களால் சுவாசிக்க முடியாது .என்று அவர் அவர் வீட்டுக்கு சென்று விட்டனர் எனவே இந்த பாதையில் சுத்தத்தை ஏற்படுத்தி ஊர் மக்களிடம் நோய் வராமல் தடுபார்களா...............ம.பக்கீர் ஒழி .....தெற்கு தெரு பெரியபட்டினம்

    ReplyDelete