Wednesday, 1 June 2011

தண்ணீர்: ஆச்சரியமான தகவல்கள்:

  
ஐ.நா. அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைதண்ணீர் சம்பந்தமான நோயினால் இறந்து போகின்றது. கெட்டுபோன மற்றும் மாச டைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற அனைத்து வகையான காரணங்களாலும் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகம்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேளாண்மை கழிவுகளால் நீர் ஆதாரங்களை நாம் அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் தொன் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடல் களில் கலக்கப்படுகின்றன.
இந்த கழிவுகளே சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும்பல்வேறு நோய்கள் பரவுவ தற்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே ஆவர். குடிநீர் தட்டுப்பாடு,சுற்றுச்சூழல் கேடு மற்றும் சுகாதார மற்ற கழிப்பிட வசதிகள் போன்ற பிரச்னைகள் ஏழைகளையே பெருமளவில் பாதிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு 18 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரைப் பயன் படுத்துவதால் உண்டாகும் நோய்களால் மட்டும் இறக்க நேரிடுகிறது.


No comments:

Post a Comment