பிரிட்டனை சேர்ந்த பிரபல மாயாஜால நிபுணர் ஸ்டீவ் பிரையானே தேம்ஸ் நிதியின் மீது நடந்து சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
டைனமோ என்று அழைக்கப்படும் இவர் மிகச்சிறந்த மாயாஜால நிபுணராக அறியப்படுகிறார். பல்வேறு சாகசங்களை செய்து காட்டி வியப்பில் ஆழ்த்துவது இவரது வழக்கம்.மாயாஜால சாகசங்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள புகழ் பெற்ற தேம்ஸ் நதியில் அவர் தண்ணீர் மீது நடக்கும் சாகசத்தை நிகழ்த்தி காட்டினார்.இதைப்பார்த்து பார்வையாளர்கள் பிரமித்து போயினர். பின்னர் அவர் படகில் வந்த காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். தண்ணீரில் நடந்து காட்டினாரா? அல்லது தண்ணீரில் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினாரா? என்று தெரியாமல் அனைவரும் வியந்து போனார்கள்.
No comments:
Post a Comment