Thursday, 23 June 2011

தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சாவு:


    பள்ளிக்குச் செல்ல பெற்றோர் தடை விதித்ததைத் தொடர்ந்து மனம் உடைந்து தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள துலாச்சேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது மகள் சுப்புலட்சுமி, மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு முடித்திருந்தார்.

 இந்நிலையில் பிளஸ் 2 படிக்க வைக்க வசதி இல்லாததால் அவர், பள்ளிக்குச் செல்வதற்கு பெற்றோர் தடை விதித்தனர். இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி கடந்த 16 - ம்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் சுப்புலட்சுமி இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments:

Post a Comment