Wednesday, 1 June 2011

வறுமையை நோக்கி உலகம் :


   லண்டன்:சர்வதேச அளவிலான உணவு நெருக்கடி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்நாட்டு போரை உருவாக்கும் என ஐ.நா கூற்றை நிரூபிக்கும் வகையிலான அறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் நிலையான உணவு நெருக்கடியில் ஆழ்ந்துவிடும் என அவ்வறிக்கை கூறுகிறது. 98 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏழில் ஒரு நபர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருவதாக அதிர்ச்சியான செய்தியை கூறுகிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை.
விலை உயர்வும், அதிகரிக்கும் மக்கள் தொகையும் (?) எதிர்காலத்தில் உலகை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றும் என ஆக்ஸ்பாம் கூறுகிறது. 1990-ஆம் ஆண்டிற்கு பிறகு உணவு பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டு 120 முதல் 180 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வருமானத்தின் 80 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் உலகில் வாழ்வாதாரங்களுக்காக கஷ்டபட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது நெருக்கடியை சந்திக்கும் உணவு பாதுகாப்பற்ற நாடுகளை குறித்தும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இதில் இந்தியாவும் உட்படும். குவாட்டிமாலா, அஸர்பைஜான், கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியனவும் இதில் அடங்கும்.

No comments:

Post a Comment