பெற்றோர் தினமும் குடிப்பதை பார்க்கும் குழந்தைகள் அவர்களும் இளம் வயதில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பிள்ளைகளை கவனிப்பதில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகுகிறார்கள்.
குடும்பத்தில் குடிப்பழக்கத்தை பார்ப்பதுடன் நண்பர்கள் குடிப்பதை பார்த்தும் இளைஞர்கள் அந்த பழக்கத்திற்கு ஆளாகுகிறார்கள். ஜோசப் ரோவன்ட்றீ பவுண்டேஷன் ஆய்வாளர்கள் 3 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 5700 சிறுவர்களை ஆய்வு செய்தனர். அப்போது 5ல் ஒருவர் 14 வயது ஆன நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளானது தெரியவந்தது.இளைஞர்களிடம் குடிப்பழக்கம் வர பெற்றோர்களின் நடவடிக்கைகள் முக்கிய சக்தியாக அமைகின்றன. இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதால் ஆரோக்கிய குறைபாடு அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே ஆல்கஹால் விலையை அதிகரித்து அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என ஆய்வு அறிவுறுத்துகிறது.
No comments:
Post a Comment