Sunday, 26 June 2011

அமெரிக்காவில் மைனாரிட்டியாகும் வெள்ளை இனத்தவர்கள் :

        
                  அமெரிக்காவில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர்.ஆனால் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெள்ளையின குழந்தைகளை விட கறுப்பின குழந்தைகள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதை வைத்து கணக்கிடும் போது 2050ம் ஆண்டுகளில் கறுப்பு இனத்தவர்கள் மெஜாரிட்டியாகவும், வெள்ளையர்கள் மைனாரிட்டியாகவும் மாறும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும் அமெரிக்காவில் திருமணம் செய்து கொள்பவர்களின் விகிதம் குறைவதால் குடும்பத் தலைவியாக பெண்கள் இருக்கும் ஆப்பிரிக்க குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment