Thursday, 30 June 2011

உலமாக்களுக்கு அடையாள அட்டை:


கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் ஆட்சியர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது.


 இதில் முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்விக்கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 545 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறையின் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் 27 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகளும், தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் சிறந்த தமிழ் வரைவுக்கான 3-வது பரிசுத்தொகை ரூ.1,000-க்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழையும் குடிநீர் வடிகால் வாரிய சர்குலர் அலுவலகத்தில் பணிபுரியும் சாந்திக்கு ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார்.
அப்போது இதேபோல அனைத்து துறை அதிகாரிகளும் தமிழில் சிறப்பான வரைவுகளை எழுதி கடலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



No comments:

Post a Comment