Sunday, 10 April 2011

செத்துவிட்டது!!!!


எங்கே எங்களது  அமைதி..........?
எங்கே எங்களது மகிழ்ச்சி.........  ?
எங்கே எங்களது நிம்மதி...........  ?
எங்கே எங்களது வாழ்வாதாரம்  ..........?
எங்கே எங்களது மனிதநேயம்......... ?

                                      
                                        செத்துவிட்டது இதுவெல்லாம்
                                        எங்கள் கஷ்மீரில் .........


ஷஹிதின் முழக்கம்




ஒரு துளி இந்திரியத்திலிருந்து  எங்களை 
படைத்த வல்லோனே......... 

உன் புகழ் பாட எங்கள்  ஒரு உயிர் 
போதாது, அதனால்.......


நீ எங்களுக்கு அளித்த இந்த ஒரு 
உயிரையும் சமர்பிக்கின்றோம்.....

எங்களின் இறுதி முழக்கம்!

எங்களை வைத்து இஸ்லாத்தை 
மேலோங்க செய்வாயாக .....

எங்களை வைத்து பிறரின் வாழ்வாதாரத்தை 
உறுதி பட செய்வாயாக ........

எங்களின் உடல் உனக்காக சிதைக்கபட்டாலும்
 சரியே ,எங்கள் உயிரின் முடிவு .....

உனக்காக மற்றுமே முற்று 
பெற வேண்டும் இவ்வுலகில் ........

எங்களுக்கு அதுவே நாளை மறுமையின் 
வெற்றியாக இருக்க வேண்டும்.......

                                    !!! ஷஹிதின்  முழக்கம் !!!  



அண்ணலாரின் அற்புத வழிமுறை

‘‘ரபீஆ, கல்யாணம் பண்ணவில்லையா?’’ - இறையில்லத்தில் தன்னோடு எப்பொழுதும் ஒன்றாக இருக்கும் இளைஞர் ரபீஆவைப் (ரழி...) பார்த்து ஒரு நாள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்...)அவர்கள் கேட்டார்கள்.

ரபீஆ ஓர் ஏழை. சொந்த வீடு இல்லை. அவருக்கென்று ஒரு குடும்பமில்லை. இறுதித்தூதருக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இறையில்லத்திலேயே அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. திருமணம் முடித்தால் மனைவியுடன் வசிப்பதற்கு வீடு வேண்டும். மனைவிக்கு செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதெல்லாம் தனக்குச் சாத்தியமில்லை என்றே ரபீஆ (ரழி...) எண்ணியிருந்தார்.

‘‘எனக்குக் கல்யாணம் வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே, குடும்பத்தை நடத்துவதற்கு எனக்கு சக்தியில்லை.’’ - பெருமானாரின் கேள்விக்கு ரபீஆவின் பதில் இவ்வாறாக இருந்தது.

சில நாட்கள் கழிந்தன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்...) அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்கள். ரபீஆவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறை அண்ணலார் இதுகுறித்து வினவியபொழுதுதான் ரபீஆவுக்கு ஏதோ பொறி தட்டியது. அண்ணலார் காரியமில்லாமல், உரிய காரணமில்லாமல் மீண்டும் மீண்டும் இதனைக் கேட்க மாட்டார்களே என்றெண்ணிய ரபீஆ (ரழி...) அண்ணலாரிடம் இவ்வாறு கேட்டார்:
‘‘அல்லாஹ்வின் தூதரே, வீடும் குடும்பமுமில்லாத எனக்கு யார் பெண் தருவார்கள்?’’

அண்ணலார் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்கள். ஒரு குடும்பம் உண்டு. அங்கே ஒரு பெண் இருந்தார். அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி ரபீஆவை அண்ணலார் அனுப்பி வைத்தார்கள்.

நல்லதொரு குடும்பம் அது. தேவைக்குப் பண வசதியும் இருந்தது. தங்கள் பெண் பிள்ளைக்கு அல்லாஹ்வின் தூதரே ஒரு வரனை அனுப்பியதை அவர்கள் அல்லாஹ்வின் அருளாகவே கருதினார்கள். ரபீஆவின் வறுமை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.

‘‘அல்லாஹ்வின் தூதருக்கு நல்லது நடக்கட்டும். அவர்கள் அனுப்பி வைத்த உங்களுக்கும் நல்லது நடக்கட்டும். திருமணத்திற்கு நாங்கள் தயார்’’ என்றார்கள் அக்குடும்பத்தார்.

அந்த வீட்டிலிருந்து திரும்பும்பொழுது ரபீஆவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உண்மையில் திருமணம் நடந்து விடும் போல் தெரிகிறது. மஹர் பணம் கொடுக்கவோ, வலிமா எனும் திருமண விருந்து அளிக்கவோ தன்னிடம் சல்லிக் காசு கூட கிடையாது.

அல்லாஹ் ஏதாவதொரு வழியைக் காண்பிப்பான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு அண்ணலாரிடம் திருமணத்திற்குப் பெண் வீட்டார் சம்மதித்ததைக் கூறினார் ரபீஆ. அடுத்தடுத்த காரியங்கள் அண்ணலாரின் அறிவுரைப்படி அருமையாக அரங்கேறின.

ரபீஆவின் சில தூரத்துச் சொந்தங்களை அண்ணலார் அழைத்தார்கள். ரபீஆவின் திருமணத்திற்கு உதவியாக இருக்கும்படி அவர்களிடம் கூறினார்கள். எளிமையான திருமணத்திற்கு என்ன ஏற்பாடுகள் வேண்டிக் கிடக்கிறது? அண்ணலாரே அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்க முடியும். இருந்தும் இப்படிச் செய்தார்கள் என்றால் தனக்கும் சொந்தங்கள் உண்டு என்ற எண்ணம் ரபீஆவுக்கு வந்து அவருக்கு தைரியமூட்டும் என்பதாலேயே.

ரபீஆவுக்கு வீடு அமைத்துக்கொள்ள சிறு நிலமும் அளித்தார்கள் அண்ணலார். திருமணம் முடிந்தது. ரபீஆவின் குடும்பம் அங்கே தழைத்தோங்கி வளர்ந்தது.

இறையில்லத் திண்ணையில் அனாதையாயிருந்த ஒரு தோழரை சாதாரண, சராசரி வாழ்க்கைக்கு கருணை நபியவர்கள் கைப்பிடித்துக் கொண்டு வந்த கலையைக் கவனித்தீர்களா?

சமூகத்தில் ரபீஆவைப் போல் பல பேர் உண்டு. மிகப் பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே அவர்களைச் சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியும். முன் கையெடுக்க ஒரு ஆள் இருந்தால் போதும் - சமுதாயத்தில் அனாதைகளுக்கு ஆதரவு கிடைக்கும். அல்லல் படுபவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். மொத்தத்தில் சமுதாயம் துள்ளியெழும்!





Saturday, 9 April 2011

கொடையாளன் !


  

கொடையாலனே உன்னை விட கொடுப்பதற்கு 
எனக்கு யாருமில்லை ......
     
                                           இருப்பினும், அதை வாங்குவதற்கு 
                                           எனக்கு தகுதியில்லை ........

                                          தகுதியற்றேன் நான் .நான் செய்த 
                                           பாவத்தின் முலம்................

                                           இருப்பினும் நீ நிறுத்தவில்லை
                                           உன் கொடையை.................
                                          
                                           நீ கொடையாளன் என்பதால் ....... 

              

Friday, 8 April 2011

தேவை,558 வருடங்கள்!



                   2g ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.அதில் கொள்ளையடிக்க பட்ட மொத்த பணம் 1,76.000,00,00,000 (ஒரு லக்ச்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி) சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம் .அதை பற்றிய ஒரு சின்ன கணக்கை உங்களிடம் பஹிர்ந்துகொல்கிறேன் .
             
 இந்த பணத்தை கருணாநீதி மக்களுக்கு தானமாக கொடுக்க முன் வருகிறார் என்று வைத்து கொள்வோம் (சும்மா ஒரு பேச்சுக்குதான்). மக்கள் அனைவரையும் வரிசையில் வரச்செய்து ,ஒவ்வருவருக்கும் 100 ருபாய் தானமாக கொடுக்கிறார் என்று வைத்து கொள்வோம் .எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியும் ? ஆயிரத்து எளுநூட்று அறுபது கோடி பேருக்கு கொடுக்கலாம் .அதாவது இந்த பூமியில் வாழும் மனிதர்கள் எல்லோருக்குமே கொடுத்து முடித்த பின்,இதே மாதிரி இன்னும் மூன்று பூமியில் உள்ள மனிதர்களுக்கு கொடுக்கலாம் .சரி இந்த பணத்தை இந்தியர்களுக்கு மட்டும் கொடுப்பதாக கணக்கிட்டால் ,நமது இந்தியா  மாதிரி 15  இந்தியாவுக்கு அந்த பணத்தை தானம் செய்ய முடியும் .

 சரி அண்ணா அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு வரிசையாக வரும் மக்களுக்கு இந்த தாதனத்தை வழங்குவதாக வைத்து கொள்வோம்.ஒரு வினாடியில் ஒரு நபருக்கு ஒரு நூறு ருபாய் தாலை வழங்குவதாக வைத்து கொண்டால் கூட ,இந்த 1,76,000 கோடி ரூபாயை தானம் கொடுத்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்  தெரியுமா? நாள் அல்ல,மாதம் அல்ல, 558 வருடங்கள் ஆகும் .இடைவேளிய விடாமல்,நபர் ஒருவருக்கு ஆயிரம் ருபாய் தாலாக நீட்டினால் கூட ,கொடுத்து முடிக்க 55 
வருடம் ஆகும்.

சரி ,இந்த  1,76,000 கோடி ரூபாயை ,நூறு ருபாய் கட்டுக்களாக வைத்திருப்பதாக வைத்து கொள்வோம் .அதை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குவோம் .எவ்வளவு உயரம் போகும் என்று நினைகிறீர்கல்?
    
ஒரு நோட்டு கட்டின் கணம் ஒரு செ.மீ . என்று கணக்கிட்டால் கூட அது 1,760 கிலோ.மீ   உயரத்திற்கு போகும் .பூமியின் உச்சமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் ,விமானங்கள் பறக்கும் உயரம் போன்றவற்றுடன் எல்லாம் கூட ஓப்பிட்டு பார்க்க முடியாது .அதையெல்லாம் தாண்டி பல மடங்கு பிரம்மாண்டமான உயரம் அது .அது மட்டும் அல்லாமல் இந்த மொத்த பணத்தை வைப்பதற்கு 3 லட்சம் சூட்கேஸ்கள் தேவைப்படும்.
      
  இந்த பணத்தை எரித்தால் கூட எரிந்து முடிப்பதக்கு இரண்டு வாரங்கள் ஆகும்.என்ன ஆச்சரியமா இருக்கா. இது தான் உண்மை .   

Wednesday, 6 April 2011

செய்யது அலி ஒலியுல்லாஹ்

.
பெரியபட்டினத்தின் முக்கிய இடமாக கருதப்படுவது செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா.இது பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இதன் முக்கிய நிகழ்வாக உரூஸ் என்னும் சந்தனகூடு விழ வருடத்திற்கு ஒரு முறை கொன்டாடப்படுகிறது.இப்பொழுது இந்த தர்கா புதுப்பிக்கப்பட்டுவருகிறது. 

பெரியபட்டினம் பேருந்து(4)



பெரியபட்டினத்தில் இருந்து இராமநாதபுரதிர்க்கு வெவ்வேறு வழிகளில் பேருந்துகள் இயக்கபடுகிறது .ஆனால்  அதில் குறிப்பிட்டு சொல்லகூடிய பேருந்து என்: 4  இராமநாதபுரத்தில் அதிக வசூலை பெற்றுதரும் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை 5.  பெரியபட்டினத்தில் இருந்து 20 நிமிடத்திற்குள்லாக   இராமநாதபுரத்திற்கு இயக்கபடுகிறது .பெரியபட்டினத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் உள்ள தொலைவிற்கு சுமாராக 32  நிறுத்தங்களை உள்ளடகியுள்ளது.

ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல்



பெரிய பட்டினம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் .இது பெரியபட்டினம் கடற்க்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது.இது பெரியபட்டினம் சின்ன பள்ளிவாசல்.

அல்-மஸ்ஜிதுல் பலாக்

பெரிய பட்டினம் அல்-மஸ்ஜிதுல் பலாக் பள்ளிவாசல் .இது பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுதொலைவில் உள்ளது .இது பெரியபட்டினம் பெரியபள்ளி.

பெரியபட்டினம்


         இராமநாதபுரம்  நகருக்கு தென்கிழக்கே இருப‌து கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதுதா  , மார்க்கோ போலோ  போன்றவர்கள் வந்திறங்கிய வர‌லாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திக‌ழ்ந்துள்ள‌து.
பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம்[6] என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும், பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால்  டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும்[7] இன்று பெரிய‌ப‌ட்டின‌ம் என்றும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு க‌ட‌ல்தொழில் முக்கிய‌த்தொழிலாக‌ இருக்கிற‌து.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,478 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 4,793 ஆண்கள், 4,685 பெண்கள் ஆவார்கள். பெரிய‌ப‌ட்டின‌ம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.44% ஆகும்.
                            தகவல்          

         ஊர் பெயர் :               பெரியபட்டினம்
          மாவட்டம் :              இராமநாதபுரம் 
          மாநிலம் :                  தமிழ்நாடு 
          நாடு :                          இந்தியா 
         மொழி :                       தமிழ் 
         வெப்ப நிலை :        30 டிகிரி செல்சியஸ் (வெயில் காலங்களில் )
                                               25 டிகிரி செல்சியஸ் (மலை  காலங்களில் )

        குறியீடுகள் :
                 
                                             அஞ்சல் எண் :623523
                                             போன் நம்பர் :04567-
                                              வாகனம் :TN  - 65