Wednesday, 6 April 2011

பெரியபட்டினம்


         இராமநாதபுரம்  நகருக்கு தென்கிழக்கே இருப‌து கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதுதா  , மார்க்கோ போலோ  போன்றவர்கள் வந்திறங்கிய வர‌லாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திக‌ழ்ந்துள்ள‌து.
பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம்[6] என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும், பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால்  டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும்[7] இன்று பெரிய‌ப‌ட்டின‌ம் என்றும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு க‌ட‌ல்தொழில் முக்கிய‌த்தொழிலாக‌ இருக்கிற‌து.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,478 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 4,793 ஆண்கள், 4,685 பெண்கள் ஆவார்கள். பெரிய‌ப‌ட்டின‌ம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.44% ஆகும்.
                            தகவல்          

         ஊர் பெயர் :               பெரியபட்டினம்
          மாவட்டம் :              இராமநாதபுரம் 
          மாநிலம் :                  தமிழ்நாடு 
          நாடு :                          இந்தியா 
         மொழி :                       தமிழ் 
         வெப்ப நிலை :        30 டிகிரி செல்சியஸ் (வெயில் காலங்களில் )
                                               25 டிகிரி செல்சியஸ் (மலை  காலங்களில் )

        குறியீடுகள் :
                 
                                             அஞ்சல் எண் :623523
                                             போன் நம்பர் :04567-
                                              வாகனம் :TN  - 65

No comments:

Post a Comment