Saturday, 2 July 2011

சவுதி அரேபியா தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி:


            ரியாத், ஜூலை 2 : சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர்.
ரியாத்தில் உள்ள அல் பத்தா என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


அந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 6 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 5 பேர் கேரளாவையும், ஒருவர் கர்நாடகாவையும் சேரந்தவர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமது தெரிவித்துள்ளார்.
அவர்களது உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி ரியாத்தில் உள்ள இந்தியா தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இ. அகமது கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட இ.அகமது, தீ விபத்துக்கான காரணம் குறித்து சவுதி அரேபிய அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிடும் என்று கூறினார்.


No comments:

Post a Comment