Thursday, 7 July 2011

தயாநிதி மாறன்- ராஜினாமா


மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் அளித்தார்.முன்னர் , பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்றார்.  
ஆனால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனை, அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள நடவடிக்கை அறிக்கை குறித்து அமைச்சரவை விவாதிக்கத் தொடங்கியதும் அவர் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டார்.
பின்னர் அவர்  பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அங்கிருந்து அவர் வெளியே வந்து காரில் புறப்பட்டதும், வழக்கமான சிவப்பு சுழல் விளக்கு காரில் இல்லை.
2ஜி வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில்  நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது.
இதனால், தயாநிதி மாறன் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இதனிடையே, டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது தயாநிதி விலக வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதியும் ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது.



No comments:

Post a Comment