லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார். லிபியாவில் பொது மக்களை பாதுகாக்க போகிறோம் என்று கூறிக்கொண்டு நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா
ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நேட்டோ படைகள் லிபிய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகிறது.
இந்த நிலையில் கடாபியின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் தலைநகர் திரிபோலியின் கிறீன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் பச்சைக் கொடியை அசைத்தவாறு கடாபியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
லிபிய தலைநகர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொலைபேசி வழியாக பேசினார். நேட்டோ படையினர் தங்களது வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கடாபி எச்சரித்தார்.
நேட்டோ படைகள் உடனடியாக விலகுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ மையங்களை தகர்ப்பதற்காக லிபியாவில் வீடுகள், அப்பாவி பொது மக்கள் மீது நேட்டோ படைகள் தாக்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment