Tuesday, 5 July 2011

பசியின் கோரபிடியில் வாடும் ஆப்பிரிக்க மக்கள்


  உலக அளவில் மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், உணவுப்பொருள் விலை அதிகரிப்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் தவிக்கின்றன.எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா பகுதிகளில் உள்ள 120 லட்சம் மக்கள் பட்டினியில் உயிருக்கு போராடுகிறார்கள். ஆப்பிரிக்க பகுதிகள் பஞ்சத்தில் தவிக்காமல் இருக்க பெருமளவு உணவு, உதவி அளிக்க வேண்டும் என ஆக்ஸ் சர்வதேச தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



பசி, பட்டினியில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக கென்யா உள்ளது. இங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய் பாதிப்பை எளிதில் பெறும் உயிர்களாக உள்ளனர். வடக்கு கென்யாவில் உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 90 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் இந்த முகாமுக்குள் கிடைக்கும் சிறிய உணவைப் பெற 5 லட்சம் மக்கள் குவியும் அபாயச்சூழல் உள்ளது. தினம்தோறும் 1300 பேர் இந்த முகாமுக்கு வருகிறார்கள். இந்த முகாமில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை நாடான சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இரண்டு வருட கடும் வறட்சியால் பல லட்சம் மக்கள் உயிருக்காக போராடுகிறார்கள். தூய தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் 3 லட்சம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
அவர்களுக்கு உதவ 5 கோடி பவுண்ட் நிதி உதவி உடனடியாக தேவைப்படுகிறது என ஆக்ஸ்பாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





No comments:

Post a Comment