Wednesday, 6 July 2011

மீண்டும் வெடித்தது தெலுங்கான ! உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே போலீஸ் குவிப்பு :


  நேற்று முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.இதனால் ஐதராபாத், மெதக் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பேரூந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஒரேநாளில் ரூ. 10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படடுள்ளது.

உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி செல்ல முயன்றபோது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார். இதையடுத்து அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டது. மேலும் உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் வெளியே வரக்கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர்.

இரண்டாவது நாளாக இன்று தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பஸ்கள் ஓடவில்லை. பதட்டமான பகுதிகளில் துணை ராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் தீவிர ரோந்து வருகிறார்கள்.


தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு தலைவர் பேராசிரியர் கோதண்டராம் நிருபர்களிடம் கூறியதாவது:

தெலுங்கானா கோரிக்கையை வற்புறுத்தி பெரும்பாலான எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். அவர்களது ராஜினாமாவை ஆந்திர சபாநாயகர் ஏற்க வேண்டும்.உள்துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டி பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தலைமை செயலகம் சென்று பணியாற்றுகிறார்.பதவியை ராஜினாமா செய்ததாக நாடகம் ஆடுகிறாரா? அவருக்கு தெலுங்கானா கூட்டு போராட்டக் குழு சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

தனி மாநில போராட்டம் தொடரும். நாளை மாணவர்கள் அனைவரும் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி பேரணி செல்கிறார்கள். வரும் 10 ஆம் தேதி தெலுங்கானா பகுதிகளில் சாலையில் சமையல் செய்து சாப்பிடும் போராட்டம் நடைபெறும்.



No comments:

Post a Comment