Sunday, 17 July 2011

பெரியபட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரன்ட்டின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டம் :


    தமிழ்நாடு  முழுவதும் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட்டின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்கை நடை பெற்று கொண்டு இருக்கிறது அதன் ஒரு பகுதியாக பெரியபட்டிணம் சமுதயகூடத்தில் (17.07.2011) நடந்த கூட்டத்தில் பெரியபட்டினத்தை சேர்ந்த பசிர் அவர்கள் தலைமை ஏற்று  சிறப்பு உரை வழங்கினார். அவர் தனது உரையில்,



முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பது  வெளிநாடு செல்வதற்காக மட்டும் தான் என்ற நிலை  உருவாகியுள்ளது .அவர்கள் தனது கல்வியை முஸ்லிம் சமூகத்திற்கு பயன்படுத்தாததின்  காரணமாக இன்று உலக முழுவதும் முஸ்லிம்களின் கல்வி நிலை 20 % ஆனால் மற்றவர்கள் 80 % கல்வியறிவு பெற்றுள்ளார்கள் . இன்னும் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்தவர்கள் அரசு துறைகளில் மிகவும் பின்தங்கிய நிலை உள்ளது .உலகநாடுகள் அனைத்தும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து கொண்டு போகும் நிலையில் இந்த முஸ்லிம் நாடுகள் கல்வியறிவு இல்லாததின் காரணமாக எந்த முன்னேற்ற நிலையையும் அடையாமல்  இருந்து கொண்டு இருக்கிறது.என்று மாணவர்களுக்கு  கல்வியை அறிவை ஊக்கு விக்கும் வகையில்  உரை நிகழ்த்தினார்.
               
இதில் பெரியபட்டினத்தை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள்  கலந்து கொண்டார்கள்    
                     
                                                                                                           நன்றி 
                                                                                                       அஜ்மீர் PPM

No comments:

Post a Comment