ஜோத்பூர் : குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய முன்வருபவர்களுக்கு ராஜஸ்தான் அரசாங்கம் தொலைக்காட்சி, மைக்ரோ ஓவன், நானோ கார் என பல்வகை பரிசுகளை அளிக்கவுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜுஹுஞ்ஹுனு மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி ப்ரதாப் சிங் தத்தர் இது குறித்து கூறும் போது
மேலும் வருடத்திற்கு 21,000 நபர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற அரசாங்க குறியீடை எட்ட வேண்டும் என்பதற்காகவே இப்பரிசு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில சமூக சேவை குழுக்கள் இம்மாதிரி அவசரப்பட்டு செய்வது தரத்தை குறைத்து விடும் என்றும் ஒவ்வொரு தடவையும் மக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு கார், பைக்குகளை எதிர்பார்ப்பர் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment