Thursday, 30 June 2011
Tuesday, 28 June 2011
Monday, 27 June 2011
Sunday, 26 June 2011
Saturday, 25 June 2011
Friday, 24 June 2011
Thursday, 23 June 2011
தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சாவு:
பள்ளிக்குச் செல்ல பெற்றோர் தடை விதித்ததைத் தொடர்ந்து மனம் உடைந்து தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள துலாச்சேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது மகள் சுப்புலட்சுமி, மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு முடித்திருந்தார்.
Saturday, 18 June 2011
Friday, 17 June 2011
2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை
மத்திய அமெரிக்காவின் மாயா பிரிவினர் மக்கள் காலாண்டர் கணிப்புபடி இன்னும் 18 மாதத்தில் உலகம் அழியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த கணிப்பு குறித்த பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
Thursday, 16 June 2011
Tuesday, 14 June 2011
Monday, 13 June 2011
உண்ணாவிரத புரட்சிகளும் சர்மிலா சானுவும் !
ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலை என்ன?
அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி!
14 வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த உ.பீ போலீசின் மிருகத்தனம்
லகிம்பூர் கேரி:உ.பி மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயதான முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த படுபாதக சம்பவத்தின் பின்னணியில் போலீசார் செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
Tuesday, 7 June 2011
அக்கிரமிப்பு ராணுவ தாக்குதலில் பலஸ்தீன இளைஞன் படுகாயம்
கடந்த செவ்வாய்க்கிழமை (07.06.2011) காஸா பிரதேச பெய்ட் ஹனூன் பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேரணியை இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், பேரணியாளர் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததோடு,கையெறி குண்டுகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசிக் கடும் தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பலஸ்தீன் பொதுமக்களில் அனேகர் காயமடைந்தனர்
பிரபலமானது சுஷ்மா சுவராஜ்ஜின் இரவு நடனம் : டுவிட்டரில் புலம்பல்
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏன் தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்றன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
Friday, 3 June 2011
Thursday, 2 June 2011
வெற்றி பெறுவதற்கு...
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
Wednesday, 1 June 2011
வறுமையை நோக்கி உலகம் :
லண்டன்:சர்வதேச அளவிலான உணவு நெருக்கடி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்நாட்டு போரை உருவாக்கும் என ஐ.நா கூற்றை நிரூபிக்கும் வகையிலான அறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் நிலையான உணவு நெருக்கடியில் ஆழ்ந்துவிடும் என அவ்வறிக்கை கூறுகிறது. 98 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏழில் ஒரு நபர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருவதாக அதிர்ச்சியான செய்தியை கூறுகிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை.
விலை உயர்வும், அதிகரிக்கும் மக்கள் தொகையும் (?) எதிர்காலத்தில் உலகை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றும் என ஆக்ஸ்பாம் கூறுகிறது. 1990-ஆம் ஆண்டிற்கு பிறகு உணவு பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டு 120 முதல் 180 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வருமானத்தின் 80 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் உலகில் வாழ்வாதாரங்களுக்காக கஷ்டபட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது நெருக்கடியை சந்திக்கும் உணவு பாதுகாப்பற்ற நாடுகளை குறித்தும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இதில் இந்தியாவும் உட்படும். குவாட்டிமாலா, அஸர்பைஜான், கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியனவும் இதில் அடங்கும்.
தண்ணீர்: ஆச்சரியமான தகவல்கள்:
ஐ.நா. அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை, தண்ணீர் சம்பந்தமான நோயினால் இறந்து போகின்றது. கெட்டுபோன மற்றும் மாச டைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற அனைத்து வகையான காரணங்களாலும் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகம்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேளாண்மை கழிவுகளால் நீர் ஆதாரங்களை நாம் அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் தொன் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடல் களில் கலக்கப்படுகின்றன.
இந்த கழிவுகளே சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், பல்வேறு நோய்கள் பரவுவ தற்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே ஆவர். குடிநீர் தட்டுப்பாடு,சுற்றுச்சூழல் கேடு மற்றும் சுகாதார மற்ற கழிப்பிட வசதிகள் போன்ற பிரச்னைகள் ஏழைகளையே பெருமளவில் பாதிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு 18 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரைப் பயன் படுத்துவதால் உண்டாகும் நோய்களால் மட்டும் இறக்க நேரிடுகிறது.
Subscribe to:
Posts (Atom)